திருவறை தரிசனம் : சிறப்பு வழிபாடு - வள்ளலாரை வணங்கிய பக்தர்கள்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சித்திபெற்ற மேட்டுகுப்பத்தில் திருவறை தரிசனம் நடைபெற்றது.
திருவறை தரிசனம் : சிறப்பு வழிபாடு - வள்ளலாரை வணங்கிய பக்தர்கள்
Published on

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சித்திபெற்ற மேட்டுகுப்பத்தில் திருவறை தரிசனம் நடைபெற்றது.தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 150 வது ஆண்டு ஜோதி தரிசனம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திற்கு வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவபடம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இவற்றை கருங்குழி கிராமத்தை சேர்ந்த மீனவ சமூகத்தினர் தோளில் சுமந்து எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, நடைபெற்ற திருவறை தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com