பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை.. வலியால் கதறி துடித்த மாணவன் - பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு

x

திருவண்ணாமலை அருகே, தலைமை ஆசிரியர் அடித்ததில், காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த வாழவச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சச்சின் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், உணவு இடைவேளையில் விளையாடிக் கொண்டிருந்த சச்சினை அழைத்த தலைமை ஆசிரியை அமுதா, மாணவனின் மணிக்கட்டில் பிரம்பால் தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் கதறிய மாணவனை அவரது பெற்றோர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்