அந்த பிஸ்கட்டுக்கு ஆசைப்பட்டு பறிபோன அதிர்ஷ்ட மோதிரம் .. மக்களே உஷார்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நாடக கலைஞரிடம் போலியான தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். லோகநாதன் என்பவரிடம் கடந்த 7ம் தேதி 3 டிப்டாப் ஆசாமிகள்ஆசைவார்த்தைகள் கூறி போலியான தங்க பிஸ்கட்டுகளை கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்த தங்க மோதிரத்தை வாங்கி சென்றுள்ளனர். தங்க பிஸ்கட்டுகளை பரிசோதித்த லோகநாதன் மோசடி விவரம் தெரியவந்ததைத் தொடர்ந்து போலீசில் புகார் அளித்தார். விசாரணையை அடுத்து, 3 நபர்களும் வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சொகுசு கார் மற்றும் போலி தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன
Next Story