பஞ்சாபை சேர்ந்தவரின் தமிழ் ஆர்வம் : வீட்டு மரங்களில் திருவள்ளுவர் சிற்பம்

சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜஸ்வந்த சிங் என்னும் நபர் தமிழ் மீது கொண்ட பற்றினால், தமது வீட்டு மரங்களில் திருவள்ளுவரை சிற்பமாக செதுக்கி வைத்துள்ளார்.

சீனித் துளசி என்ற செடி மூலம் பரவலாக அறியப்பட்டவர் ஜஸ்வந்த் சிங். இவர் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் வகையில், தமது வீட்டில் உள்ள சந்தன மரம், மாமரத்தில் திருவள்ளுவரின் உருவத்தை செதுக்கி வைத்துள்ளார். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால், திருவள்ளுவரை பெரிதும் விரும்புவதாக கூறிய அவர், திருக்குறளை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டதாக கூறுகிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com