திருவள்ளுவர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வீடு : திருக்குறள் ஆர்வலரின் 17 ஆண்டு கால சேவை

அணிவகுத்து நிற்கும் திருவள்ளுவர் சிலைகளால் பார்ப்பதற்கு அருங்காட்சியகமோ என்று பிரமிக்க வைக்கிறது, திருக்குறள் ஆர்வலர் ஒருவரது வீடு.... திருவள்ளுவர் மீது அவர் கொண்டிருக்கும் பற்றை விவரிக்கிறது இந்த தொகுப்பு

கோவையை சேர்ந்த திருக்குறள் ஆர்வலர் நித்தியானந்தபாரதியின் வீட்டை பார்க்கையில் தெரிகிறது,

திருவள்ளுவர் அவரது மனதில் எவ்வளவு ஆழமாக வீற்றிருக்கிறார் என்று....

தமிழ் மீதான தீரா பற்று கொண்டு, கடந்த 17 ஆண்டு காலமாக திருக்குறளையும் திருவள்ளுவரையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதிலும் இவர் காட்டும் தீவிரம்.. பல்வேறு சேவைகளை உள்ளடக்கியது...

சிறு தொழிலதிபரான பாரதி, வாரம்தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கு இலவசமாக நடத்தி வருகிறார்

திருக்குறள் கருத்தரங்கம், திருக்குறள் போட்டி, திருவள்ளுவர் சிலை, திருக்குறள் வழி தெருக்கூத்து என நீள்கிறது ,திருக்குறள் பிரசார பட்டியல்

திருவள்ளுவர் சிலைகளை உருவாக்கி அவற்றை பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நிறுவியும் வள்ளுவத்தை பரப்பி வருகிறார் இவர் .....

பாரதியின் இந்த தமிழ்ப்பணி 30 க்கும் மேற்பட்ட விருதுகளால் கவுரவிக்கப் பட்டிருப்பது தனி சிறப்பு...

திருவள்ளுவர் எல்லாமானவர்... அவர் எல்லாருக்கும் உரியவர் என கூறும் பாரதி, திருவள்ளுவரை அரசியலாக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com