திருவள்ளுவர் தின சிறப்பு சலுகைகள் - 1 தேநீர் விலை ரூ.1

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே ஒரு டீ கடை உரிமையாளர் ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு திருக்குறள் புத்தகம், மரக்கன்று வழங்கினார்.
திருவள்ளுவர் தின சிறப்பு சலுகைகள் - 1 தேநீர் விலை ரூ.1
Published on

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே ஒரு டீ கடை உரிமையாளர் ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு திருக்குறள் புத்தகம், மரக்கன்று வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கரிசநாட்டில் தேநீர் கடை வைத்திருக்கும் சண்முகம் என்பவர் அங்குள்ள மக்கள் நல இயக்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஒரு டீ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்த சண்முகம், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளும் வழங்கினார். இது மட்டுமின்றி மாணவர்களுக்கு, திருக்குறள் புத்தகமும் வழங்கி சிறப்பித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com