கணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை - 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை தாக்கி, கணவர் கண்முன்னே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
கணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை - 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி, தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது கோங்கல் பகுதியில் வாகனத்தை வழிமறித்த 4 பேர் முரளியை தாக்கிவிட்டு, அவருடைய மனைவியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான முரளி, அருகில் இருந்த கிராம மக்களை துணைக்கு அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்ததையடுத்து 4 பேரும் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மோகன், முனிசாமி, லட்சுமணன் மற்றும் சிவா ஆகியோரை கைது செய்தனர்.

மோகன், முனியசாமி ஆகியோர், புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 18 வயதுக்கு குறைவான லட்சுமணன். சிவா ஆகியோரை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com