அடுத்தடுத்து குண்டு வீச்சு... அலறிய திமுக நிர்வாகி வீடு... டிரைவருக்கு வெட்டு... நடுங்கிய சோழவரம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வசித்து வருபவர் அபிஷா ப்ரியா வர்ஷினி. திமுகவின் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவரான இவரது வீட்டின் மீது, கடந்த 15 ஆம் தேதி மர்மநபர்கள் நாட்டு வெடி குண்டு வீசினர். தொடர்ந்து, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரி பார்க்கிங் மீது நாட்டு வெடி குண்டு வீசிய கும்பல், லாரி ஓட்டுநர் ஒருவரை அரிவாளால் வெட்டிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பிரபல ரவுடி டியோ கார்த்திக் உட்பட மூவரை கைது செய்த நிலையில், தொடர் தலைமறைவில் இருந்த சந்திரன் என்பவரையும் தற்போது கைது செய்திருக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com