Thiruvallur | யார்... யார்... மோதப்போறாங்க? - எகிறும் ஹைப்-உடன் நெருங்கும் தேர்தல்
யார்... யார்... மோதப்போறாங்க? - எகிறும் ஹைப்-உடன் நெருங்கும் தேர்தல்
Thiruvallur | `மாவட்டத்தோட பெயரையே கொண்ட தொகுதி' யார்... யார்... மோதப்போறாங்க? - எகிறும் ஹைப்-உடன் நெருங்கும் தேர்தல் மாவட்டத்தோட பெயரையே கொண்ட தொகுதி, திருவள்ளூர் நகர் பகுதிகளையும், சுற்றியிருக்கும் கிராமங்களையும் உள்ளடக்கியது. வீரராகவ பெருமாள் கோயில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் அமைச்சிருக்கிற தொகுதி. தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் இருக்கும் தொகுதியில நகர்பகுதியில வியாபாரம், கிராமங்களில் விவசாயம் மக்களுடைய பிரதான வாழ்வாதாரமா இருக்கு. 2025 டிசம்பர் 19 SIR வரைவுபடி தொகுதியில ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 790 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 992 பெண் வாக்காளர்கள், 36 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தமாக 2 லட்சத்து 38 ஆயிரத்து 818 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
