இளைஞரை தீப்பொறி பறக்க விழவைத்த காவலர் - திரைப்படம் போல் விழுந்து உராய்ந்த இளைஞன்

திருவள்ளூர் அடுத்த பொன்னேரி அருகே நிற்காமல் சென்ற வாகனத்தை லத்தியால் அடித்து, கீழே விழச் செய்த போலீசாரைக் கண்டித்து மறியல் நடைபெற்றது.
இளைஞரை தீப்பொறி பறக்க விழவைத்த காவலர் - திரைப்படம் போல் விழுந்து உராய்ந்த இளைஞன்
Published on
திருவள்ளூர் அடுத்த பொன்னேரி அருகே நிற்காமல் சென்ற வாகனத்தை லத்தியால் அடித்து, கீழே விழச் செய்த போலீசாரைக் கண்டித்து மறியல் நடைபெற்றது. தடம்பெரும்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவலர் வேகமாக வந்த ஸ்கூட்டரை மறித்தார். நிற்காமல் சென்றதால், அதன் பின்புறம் லத்தியால் ஓங்கி அடித்தார். தீப்பொறி பறக்க உராய்ந்து ஸ்கூட்டர் விழுந்தது. அதிலிருந்த இளைஞனை மீட்டு, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com