Thiruvallur | Murder News | அண்ணியை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற மைத்துனர் - பேரதிர்ச்சி காரணம்

x

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே அண்ணியை மைத்துநர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மப்பேடு பகுதியை சேர்ந்த இசைமேகம் என்பவர் தனது மனைவியை திட்டியதற்காக அண்ணியோடு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அண்ணி சாந்தியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் சாந்தியின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இசைமேகம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்