Thiruvallur | பெட்ரோல் பங்க்கில் தகாத வார்த்தைகளால் திட்டி ஊழியரை தாக்கிய நபர் - பரபரப்பு சிசிடிவி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பெட்ரோல் பங்க் ஊழியரை, கடுமையாக தாக்கிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருத்தணி பைபாஸ் ரவுண்டான பகுதியில் உள்ள தனியார் பங்கில், பெட்ரோல் போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்துள்ளார். மேலும் வந்தவர் பங்கில் கூட்டம் அதிகம் இருந்த நிலையில், தனது வண்டிக்குதான் பெட்ரோலை முதலில் போட வேண்டும் என ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து ஊழியரை தகாத வார்த்தையில் திட்டி, கடுமையாக தாக்கியும் உள்ளார். இதில் காயமடைந்த பங்க் ஊழியர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் தாக்கிய நபரை தேடி வருகின்றனர்.
Next Story
