திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு - சிபிசிஐடி கேட்டதற்கு கோர்ட் அனுமதி
சிறுவன் கடத்தல் வழக்கு - 5 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை, 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருவாலங்காடு சிறுவன் கடத்தல் வழக்கில், வனராஜா, மணிகண்டன், கணேசன், சரத் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பெண் காவலர் மகேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜாமின் கேட்டு 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், வழக்கை விசாரிக்கும் திருவள்ளூர் சிபிசிஐடி போலீசார், 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் வினோத், 2 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் காவலில் விசாரிக்க அழைத்துச் சென்றனர்.
