Thiruvallur | 3ஆம் வகுப்பு சிறுமிக்கு பள்ளி வேனில் பாலியல் சீண்டல் - கண்சிவந்து பெற்றோர் செய்த செயல்

Thiruvallur | 3ஆம் வகுப்பு சிறுமிக்கு பள்ளி வேனில் பாலியல் சீண்டல் - கண்சிவந்து பெற்றோர் செய்த செயல்

Thiruvallur | 3ஆம் வகுப்பு சிறுமிக்கு பள்ளி வேனில் பாலியல் சீண்டல் - கண்சிவந்து பெற்றோர் செய்த செயல் மாவட்டம், பொன்னேரியில் 3 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு வேனில் சென்று வருகிறார். கடந்த சில நாட்களாக பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி வழக்கத்திற்கு மாறாக இருந்துள்ளார். சிறுமியின் தாய் கேட்டபோது பள்ளி வேன் ஓட்டுநர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததை அறிந்து அதிர்ச்யடைந்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பொன்னேரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (57) என்பவரை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com