Thiruttani | ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனத்தில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாகவும், 100 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் மலைக்கோவிலில் உள்ள வாகன நிறுத்துமிடம் முழுவதும் நிரம்பியது. இதனால் மலைப்பாதையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com