தாய், மகன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் : கொன்றது எப்படி? - அதிர வைக்கும் வாக்குமூலம்

திருத்தணி அருகே தாய் மற்றும் மகனை கொன்று நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவத்தில் பக்கத்து வீட்டு இளைஞர் சிக்கியுள்ளார்.
தாய், மகன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் : கொன்றது எப்படி? - அதிர வைக்கும் வாக்குமூலம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் வன பெருமாள். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது மனைவி விஜி மற்றும், மகன் போத்திராஜ் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். வீட்டில் இருந்த நகை, பணம், கொள்ளையடிக்கப்பட்டிருந்த‌து. இதுகுறித்து வனபெருமாள் திருத்தணி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கட் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இருவரையும் கொன்றது ஏன், எப்படி என்பது குறித்து வெங்கட் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, முகமூடியுடன் கொள்ளையடிக்க சென்றபோது, விஜி பார்த்துவிட்டதால், அவரை இரும்பு கம்பியால் பலமாக தாக்கி கொன்ற வெங்கட், அவரது பத்து வயது மகனையும் ஒயரால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். கொள்ளையடித்த நகைகள் குறித்து வெங்கட் அளித்த தகவலின்பேரில் போலீசார், 3 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக பக்கத்துவீட்டுக்கார‌ர் சிக்கியுள்ளது மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com