திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.40 கோடி
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 40 லட்சத்து 13 ஆயிரத்து 810 ரூபாய் பணமாக கிடைத்துள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் 27 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் ஒரு கோடியே 40 லட்சத்து 13 ஆயிரத்து 810 ரூபாய் பணமும், 632 கிராம் தங்கம்,13 ஆயிரத்து 434 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது
Next Story