ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த இளைஞர்கள் கைது - விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த இளைஞர்கள் கைது - விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Published on

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் சுற்றிதிரிந்த சில இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடைகளை திறக்கவும் அனுமதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மங்கலம் நால்ரோடு சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாது என போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com