அடிபட்டு கிடந்த அரிய வகை ஆந்தை - காப்பாற்றிய கிராம மக்கள்

திருப்பூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் ஆஸ்திரேலிய நாட்டின் அரிய வகை ஆந்தையான வெண்கூகை பறக்க முடியாமல் கீழே விழுந்து கிடந்தது. அதை கண்ட கிராம மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்த அப்பகுதி மக்கள் அரிய வகை ஆந்தையை காண அங்கு ஆர்வத்துடன் கூடினர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் பறக்க முடியாமல் தடுமாறிய ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சையளிக்க கொண்டு சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com