வீடு திரும்பிய பெண்ணுக்கு நடந்த சோகம் - ஸ்பாட்டிலே துடிதுடித்து பறிபோன உயிர்
நாட்டறம்பள்ளி அருகே பணிக்கு சென்று வீடு திரும்பி பெண், அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி
பகுதியைச் சேர்ந்த ஜானகி திருப்பத்தூரில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தார். கணவர் ராஜேந்திரன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில்,ஜானகி தனது மகனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய ஜானகியின் இருசக்கர வாகனத்தின் மீது வேலூரில் இருந்து வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Next Story
