Thirupathur | Marriage Issue | மாமனாரை குடும்பத்துடன் கொல்ல முயன்ற மருமகன் - அதிர்ச்சி காரணம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாமனாரை குடும்பத்துடன் கொலை செய்ய முயன்ற மருமகன் கைது செய்யப்பட்டார். ஜோலார்பேட்டையை அடுத்த பக்ரீத் தக்கா பகுதியை சேர்ந்த ராஜா மகள் நந்தினியை அவரது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அரவிந்த் காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் நந்தினியை அரவிந்த் துன்புறுத்தியதால் அவர் மனநலம் பாதித்த நிலையில், மகளை பார்க்க வருமாறு ராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அரவிந்த் காரில் சென்றார். அப்போது ஏலகிரி ஏரியில் திட்டமிட்டு காரை அரவிந்த் கவிழ்த்ததில் ராஜா உள்ளிட்டோர் நீந்தி தப்பினர். அரவிந்தை போலீசார் கைது செய்தனர்.
Next Story
