Thirupathur | ``தாலிய அறுத்துட்டானே.. போலீசே வேடிக்கை பாத்தா எப்படி சார்’’.. ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து தாலியை காட்டி கதறிய பெண்

திருப்பத்தூரில் சொத்து பிரச்சினையில் கணவரை மாமனார் வீட்டினர் தாக்கியதால், மனைவி ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு மலைப் பகுதியைச் சேர்ந்த அனுமன், வேறு சாதி பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில், அனுமன் தனது தந்தைவழி சொத்தில் வீடு கட்டி வந்துள்ளார். அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடிய அனுமன் குடும்பத்தினர், அவரை கத்தியால் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கேயும் தகராறு ஏற்பட்டதால் சுகுணாவின் தாலிச்செயின் கழன்றது. இதைக் கண்டித்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com