ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணைய மாட்டார் - திருநாவுக்கரசர்

ப.சிதம்பரம் கைது தம்மை மிகவும் வருந்த வைப்பதாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணைய மாட்டார் - திருநாவுக்கரசர்
Published on

ப.சிதம்பரம் கைது தம்மை மிகவும் வருந்த வைப்பதாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப.சிதம்பரம், டி கே சிவகுமார் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை என்று கூறினார். அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் என தெரிவித்த அவர், இதுபோன்ற வழக்குகளின் மூலம் காங்கிரஸ் கட்சியை முடக்கி விட முடியாது என்றார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு கட்சியிலும் இணைய மாட்டார் என்றும், ஒரு கட்சி தலைமையின் கீழ் அவரால் பணி செய்ய முடியாது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com