Thirumavalavan | VCK | அடுத்தடுத்து பெரிதாகும் விவகாரம் - பதியப்பட்ட வழக்கு
கடந்த 7ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக தலைவர் திருமாவளவன் கார், தனது பைக் மீது மோதியதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு. வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மற்றும் விசிகவினர் மீது சென்னை எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு. திருமாவளவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு. வழக்கறிஞர் ராஜீவ் காந்தி புகாரின் பேரில் விசிகவினர் மீது 2 பிரிவுகளில் வழக்கு. தவறாக தடுத்து நிறுத்துதல், குற்றவியல் மிரட்டல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் அவமதிப்பு பிரிவுகளில் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு. காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளில் விசிகவினர் மீது வழக்குப்பதிவு
Next Story
