

தமிழகத்தில் ஜாதி மற்றும் மத வெறிகளுக்கு இடமளிக்காமல், திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து கானையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அதிமுக மற்றும் பாஜகவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று திருமாவளவன் கூறினார்.