வயது மகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 14 வயது மகளோடு தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏழுமலை, கடந்த 2006 ஆம் ஆண்டு தனது பாத்தியத்தில் இருந்த 30 சென்ட் இடத்திற்கு அரசிடமிருந்து பட்டா பெற்றுள்ளார். இதனை எதிர்த்து தனிநபர் தொடர்ந்த வழக்கில் பட்டாவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமக்கு மீண்டும் பட்டா வழங்க வலியுறுத்தி, ஏழுமலை தனது குடும்பத்தினருடன் தீ குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது
Next Story
