Thiruchendur Temple News | அணுவாக காணாமல் போகும் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை

x

அணு அணுவாக காணாமல் போகும் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை - ஃபைனல் ரிப்போர்ட்?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் கடற்கரையில் தொடர்ந்து ஏற்பட்டும் கடல் அரிப்பு தொடர்பாக தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குனர் இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே இரண்டு கட்ட ஆய்வு நடைபெற்றுள்ள நிலையில், இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணமூர்த்தி, பின்னர் மீன்வளத்துறை உதவி பொறியாளருடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், வரும் மார்ச் 7-ல் ஆய்வு அறிக்கை தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்