Thiruchendur Temple | திருச்செந்தூர் போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க
Thiruchendur Temple | திருச்செந்தூர் போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.பொது தரிசனத்தில், வரிசையை தாண்டி சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.இதனால், பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து வருகின்றனர்.இதேபோல, கோவிலில் முடி காணிக்கை செலுத்தவும், மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடவும் சுமார் 2 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் திருவிழாக் காலம் போல் காட்சியளித்தது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருச்செந்தூர் நகர் பகுதிக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது
