திருச்செந்தூர் ஆவணி திருவிழா நிறைவு: இன்று முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி

ஆவணி திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இன்றைய தினம் திருச்செந்தூருக்கு வந்த பக்தர்கள் கட்டணமின்றி முடி காணிக்கை செலுத்தினர். பின்னர் கடலில் புனித நீராடி, புத்தாடை அணிந்த பக்தர்கள், கோயிலுக்குள் சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். நாழிக்கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடுவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com