சுப்ரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது.
சுப்ரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்
Published on
தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியதை அடுத்து, திருவிழாவின் முதல் நாளான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் கொலுவையொட்டி, அங்குள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர். இதனையொட்டி, சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அர்ச்சனைகள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com