Thiruchendur Murugan Temple| திணறும் திருச்செந்தூர் - முருகனுக்காக காத்திருக்கும் பக்தர்கள்

திணறும் திருச்செந்தூர் - முருகனுக்காக காத்திருக்கும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

X

Thanthi TV
www.thanthitv.com