"45 வருச மண வாழ்க்கை சார்..1 நொடியில முடிஞ்சு போச்சே.. போராடி போராடி பிரிந்த மூன்று முடிச்சு''

x

"45 வருச மண வாழ்க்கை சார்..1 நொடியில முடிஞ்சு போச்சே.. போராடி போராடி பிரிந்த மூன்று முடிச்சு'' - துக்கம் தொண்டை அடைக்க உருக்கம்

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் வயதான பெண் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களை கொந்தளிக்க வைத்து இருக்கிறது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சீனிவாசன் என்பவர், மனைவி ஜோதி மற்றும் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். வயதான காலத்தில் மகளுடன் இருக்க ஆசைப்பட்ட ஜோதியின் தாய் செல்வி மற்றும் தந்தை பாண்டி இருவரும் பண்டிகை தினத்தை முன்னிட்டு மகளின் வீட்டிற்கு வந்து இருக்கின்றனர்செல்வி ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான சிகிச்சைகளை எடுத்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு மறு நாள் இரவு திடீரென செல்விக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது

இதனால் பதற்றமான குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு செல்வியை கொண்டு சென்று இருக்கின்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால் கடும் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்களிடம் ஆம்புலன்ஸ் சேவை வழங்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வெளியே சென்று இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்ட செல்வியுடன் மருத்துவமனையில் காத்து இருந்து இருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் வேறு வழியின்றி தனியார் ஆம்புலன்ஸை அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து அதன் மூலமாக சிவகங்கை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்