திருச்செந்தூர் கும்பாபிஷேகம் - 37 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்படும் மேற்குவாசல்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி மேற்குவாசல் கதவு 37 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட உள்ளது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட, உயரமாக இருப்பதால் மேற்கு வாசல் எப்போதும் அடைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கந்தசஷ்டி நாளில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது மட்டும் இந்த வாசல் திறக்கப்படும் என சொல்லப்படும் நிலையில், பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. இதனிடையே வரும் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, இந்த மேற்குவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியே கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட உள்ளது. மேலும் சுமார் 30 அடி உயரம் கொண்ட மேற்கு வாசல் கதவுகள் மற்றும் சுற்றுப்புறச் சுவர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்