Thiruchendur | திடீரென கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் - பக்தர்களுக்கு அரிப்பு, காயம்.. பரபரப்பு

Summary

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், ஜெல்லி மீன்களின் வருகை அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் நீராட அச்சமடைந்துள்ளனர். கடலில் இறங்கும் பக்தர்களுக்கு இந்த மீன்களால் உடலில் அரிப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து தகவலறிந்து வந்த தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி தலைமையிலான அதிகாரிகள், கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களைப் பிடித்து நேரில் ஆய்வு செய்தனர். பாதிக்கப்படும் பக்தர்களை உடனடியாக மீட்பது மற்றும் முதலுதவி வழங்குவது குறித்து, கடல்சார் ஆய்வாளர்களைக் கொண்டு கோவில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு நாளை பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com