Thiruchendur | திருச்செந்தூரில் குவியப்போகும் பக்தர்கள் வெளிவந்த முக்கிய அறிவிப்பு

x

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, வரும் 27ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 22 முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 27ம் தேதி திங்கள்கிழமை நடைபெற இருப்பதால், அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்