கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருச்செந்தூர் பகுதியில் குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதால் அவதிகுள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆவுடையார் குளம், எல்லப்பன் நாயக்கன் குளத்திலிருந்து வரக்கூடிய உபரி நீரானது நேரடியாக கடலுக்கு செல்ல வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் குடிநீருடன் கலப்பதால் தொற்று நோய் பரவுவதாக அப்பகுதி மக்கள் புகார். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.