தமிழகத்தில் பிச்சைக்காரி வேடத்தில் உள்ளே நுழைந்த திருடும் கும்பல் - மக்களே உஷார்

மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில், தனது கைப்பையில் இருந்த 18 சவரன் நகை திருடுபோனதாக சத்யா என்ற பெண் புகார் அளித்தார். இது குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்த போலீசார், ஆந்திராவை சேர்ந்த துர்க்கா என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், ஆந்திராவில் இருந்து கும்பலாக வந்து, பிச்சை எடுப்பது போல் வேடமிட்டு பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், 18 சவரன் நகையை ஆந்திராவில் உள்ள தனது சகோதரிக்கு ஏற்கனவே, அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, ஆந்திரா விரைந்த மயிலாடுதுறை போலீசார், துர்க்காவின் சகோதரியை பிடித்தனர். பின்னர், தரையில் புதைத்து வைத்திருந்த 18 சவரன் நகையையும் மீட்டனர். மயிலாடுதுறை போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை, பாராட்டை பெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com