ஒரு கிராமத்தையே இருட்டில் தள்ளிய திருடர்கள்... போலீசை திக்குமுக்காட வைத்த சம்பவம்

x

கள்ளக்குறிச்சி அருகே மின்மாற்றியில் இருந்து, சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கச்சிராயாப்பாளையம் அருகே உள்ள வெங்கட்டாம்பேட்டை கிராமத்தில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாத நிலையில், விடிந்ததும் மின்வாரிய அலுலகத்திற்கு தகவல் தரப்பட்டது. இதனை தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் அங்கு ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மின்மாற்றிகளை அணைத்துவிட்டு, அதிலிருந்த மூன்று லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை கண்டறிந்தனர். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்