TASMACல் திருட சென்று கல்லாவை பார்த்ததும் கடுப்பு | ரூ.35 லட்சம் மதிப்பு சரக்கை கொளுத்திய பயங்கரம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டதில், ரூ.35 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் தீயில் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இளையான்குடி அருகே உள்ள சாலைகிராமம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கௌதமை கைது செய்தனர். விசாரணையில், டாஸ்மாக்கில் பணத்தை திருட வந்தபோது, வெறும் 2,500 ரூபாய் மட்டுமே இருந்ததால் ஆத்திரமடைந்து டாஸ்மாக் கடைக்கு தீ வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
