காரே ஓட்ட தெரியாமல் ஆட்டைய போட்ட திருடன்.. தறிகெட்டு ஓடிய கார்-அடுத்தடுத்து நடந்த பயங்கரம்
விருத்தாசலத்தில் மது போதையில் காரைத் திருடி கொண்டு தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய திருடனை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த காரை மர்ம நபர் திருடிக்கொண்டு தாறுமாறாக ஓட்டிச் சென்றுள்ளார். தறிகெட்டு ஓடிய கார் சாலையில் சென்ற பைக், கார்கள் மீது மோதிவிட்டு, சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய திருடனை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story