வீட்டிற்குள் சிக்கிய திருடன் தற்கொலை மிரட்டல் - பரபரப்பு
சென்னையில் திருட வந்த இடத்தில், வீட்டிற்குள் மாட்டிக்கொண்ட திருடன், கதவை திறக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரம்ஜான். இவரது வீட்டிற்குள், வியாசர்பாடி பி.வி காலனி 29 வது தெருவை சேர்ந்த ஹசன் பாஷா என்பவர் பீரோவில் திருட முயன்றார். அப்போது, வீட்டிற்கு வந்து பார்த்த வீட்டின் உரிமையாளர், அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டி வைத்துவிட்டு, கூச்சலிட்டார். இதனிடையே, வீட்டிற்குள் சிக்கி இருந்த திருடன், கதவை திறக்காவிட்டால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட ஹசன் பாஷாவை, பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். பின்பு, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
