செல்போனை பறித்து ஓடிய திருடன் -துரத்தி பிடித்த போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

x

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்த பயணி ஒருவரிடம், ஒரு நபர் செலபோன் பறித்துவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து விரட்டி சென்ற போலீசார், செல்போன் திருடிய நபரை பிடித்து விசாரணை செய்தனர். திருட்டில் ஈடுபட்ட நபர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜோஸ்வா என்பதும் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து, 2 லட்சம் மதிப்புடைய 5 செல்போன்கள் மற்றும் ஒரு டேப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தற்போது, திருடன் விரட்டி செல்லப்பட்டு பிடிபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்