ஓய்வுக்காக தூங்கிய தொழிலாளி கைவரிசை காட்டிய திருடன்
மதுரையில் கடை முன்பாக படுத்து உறங்கிய தொழிலாளியிடம் இருந்து, இளைஞர் ஒருவர் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. மதுரை பழைய குயவர் பாளையம் பகுதியில் ப்ளக்ஸ் கடை முன்பாக, பணி முடித்துவிட்டு தொழிலாளர் ஒருவர் அயர்ந்து தூங்கியுள்ளார். இதன் பின்பு காலையில் எழுந்து பார்த்த போது, அவர் பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவை காணாமல் போயுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக வேவு பார்த்து நேக்காக செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
Next Story
