``சாமி கும்பிட விட மாட்றாங்க''.. புதுக்கோட்டையில் வெடித்த பயங்கர மோதல் - நேரில் சென்ற அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் மாலையில் நடைபெற்று முடிந்த நிலையில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு குடிசை வீடு மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மேலும் அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
Next Story
