``ஷூ காலால் மிதிச்சு.. லத்திய வச்சி அடிச்சாங்க..'' - பகீர் கிளப்பிய நபர்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் விசாரணைக்கு அழைத்து வந்தவரை தாக்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட இளைஞர் விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பொங்கல் தினத்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை தேவதானப்பட்டி போலீசார், காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். இது குறித்த வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜரான இளைஞர் ரமேஷ், போலீசார் மீது புகார் அளிக்க நினைத்தேன், ஆனாலும் தன்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவார்களோ என்ற பயத்தில் புகார் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Next Story