"அவங்க உள்ள இருக்க கூடாது.." மேயர் முன்னிலையில் கவுன்சிலர்கள் வார்தைப்போர் - பரபரப்பு காட்சி

x

சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க - அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்புகூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கியதும் திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம், மாநகராட்சி மன்ற கூட்டத்தை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியினர் வீடியோ எடுப்பதாகவும் அவர்கள் வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலையிட்டு கவுன்சிலர்களை சமாதானம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்