விடிந்தால் திருமணம், மணப்பெண் ஓட்டம் - அக்கா இல்லாததால் தங்கைக்கு தாலி..
ஒரு மனுசனோட வாழ்கைல திருமணம் தான் திருப்புமுனையா இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா அது good-அ இருக்குறதும், bad - அ மாறுறதும் நம்ம கையில இல்ல...
அதுக்கு உதாரணம் தான் இந்த புது மாப்பிள்ளையோட சோக கத.
நலங்கு வச்ச கைக்கு விலங்கு போட போறோம்னு பொண்ணு வீடே மிரட்டுனதால, "ஐயா என்ன காப்பாத்துங்கனு“
கன்ணீர் மல்க கோரிக்கை வச்சுருகாரு புது மாப்பிள்ளை...
சேலம் பக்கத்துல இருக்குற பச்சப்பட்டி கிராமத்த சேர்ந்தவரு சந்தோஷ் குமார்.
பட்டப்படிப்ப முடிச்சிட்டு, கோவையில் இருக்குற தனியார் கம்பெனியில வேலை பார்த்துட்டு வந்திருக்காரு.
சந்தோஷ்க்கு வயசாகிட்டே போனதால, கால காலத்துல பையனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டு பல இடத்துல வரண் தேடி இருக்காங்க.
அப்போ தான் தாதகாப்பட்டிய சேர்ந்த ஒரு இளம்பெண்னோட Profile சிக்கி இருக்கு.
குடும்பத்துக்கு ஏத்த மகாலட்சுமியா தெரிஞ்சதால, இந்த பொண்னு கையாள தான் நம்ம வீட்டுக்கு விளக்கேத்தனும்னு
முடிவு பண்ணி பெரியவங்க சேர்ந்து பேசி முடிச்சிருக்காங்க.
பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் கூட டபுள் ஓகேனு தெரிஞ்சதும், மளமளனு கல்யாண வேலைய ஆரம்பிச்சு, மண்டபத்தையும் புக் பண்ணி பத்திரிக்கை கொடுத்து இருக்காங்க.
விடிஞ்சா கல்யாணம்னு இருந்த நிலையில தான் திடீர்னு மணப்பெண் மாயமாகி இருக்காங்க. அதன்பிறகு தான் சந்தோஷ் குடும்பத்துக்கு அந்த பொண்ணு வேற ஒரு பையன காதலிச்சது தெரியவந்திருக்கு.
பெத்தவங்க மிரட்டலுக்கு பயந்து திருமணத்துக்கு ஒத்துக்கிட்ட மணமகள், சினிமாவுல வர்ற மாதிரி முதல் நாள் இரவில காதலனோட சிட்டா பறந்துட்டாங்க.
மொத்த கல்யாண வீடும் கலை இழந்து போயிருக்கு.
வழக்கம் போல பையனோட கையபுடுச்சு கதறுன பெண் வீட்டுக்காரங்க இந்த விசயம் வெளிய தெரிஞ்சா எங்க மானமே போயிடும்னு சொல்லி அழுது இருக்காங்க.
அதோட அவங்களோட பிளான் B -எவும் Propose பண்ணி இருக்காங்க. தீவிரமான டிஸ்கஸன்ஸ் நடந்திருக்கு...
மணமகள் அறையை லாக் பண்ணிட்டு திரும்ப ஓப்பன் பண்ணா அடுத்த சீன்லயே... ஓடிப்போன மணமகளோட தங்கச்சிய திடீர் பொண்ணா அழைச்சிட்டு வந்து மணமேடையில உட்காரவச்சுருகாங்க.
அந்த பொண்ணும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்காங்க.
சரி நடந்தது நடந்து போச்சுனு நினைச்சு “ all is well" னு அட்சதைய தூவி, குறிச்ச முகூர்த்தத்துலயே தாலிய கட்டி இருக்காங்க.
திடீர் கலயாணம்ங்கிறதால legal formalities எதயும் சரியா பண்ணல. அதனால கலயாணம் முடிச்சப்பறம் register பண்றதுக்காக மனைவியோட certificate-அ கேட்டுருக்காங்க.
ஆனா, சைபர் கிரிமினல்ஸ் OTP கேட்ட மாதிரி திருதிருனு முழிச்சிருகாங்க பெண் வீட்டுகாரங்க.
இதனால சந்தேகமடஞ்ச சந்தோஷ், பெண்ணோட ஆதார் அட்டைய வாங்கி பார்த்தப்பதான் அவர் தலையில இடியே இறங்கி இருக்கு.
அவர் தாலி கட்டி மனைவியா கூட்டிட்டுவந்த பெண் ஒரு மைனர்.
18 வயசு கூட ஆகாத பெண்ண கலயாணம் பண்ணது தெரிஞ்சா , குடும்பத்தோட சிறைக்கு போகனும்னு பயந்த சந்தோஷ் ஃபேமிலி, பெண் வீட்டுல இத பத்தி கேட்டுருக்காங்க.
ஆனா அவங்களோ எதுக்கும் பிடி கொடுக்காததால, இரண்டு தரப்புக்கும் மோதல் உருவாகி இருக்கு.
ஒரு கட்டத்துல அந்த பெண் அவரோட அப்பா, அம்மா வீட்டுக்கு திரும்பி போயிருக்காங்க. அதோடு, தன்ன குழந்தை திருமண செஞ்சுட்டதா மகளிர் காவல் நிலையத்துலயும் கம்பிளைன்ட் பண்ணி இருக்காங்க.
