"ஆள கூட்டிட்டு வந்து மிரட்டுனாங்க.. நேத்துல இருந்து அவரை காணோம்.." - கதறும் மனைவி
கந்துவட்டி கொடுமை - ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் கடத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டி தந்த நபரும், திமுக நிர்வாகியும் சேர்ந்து தனது கணவரை கடத்தி சென்றுவிட்டதாக, இளம் பெண் ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை , ராஜகோபால்நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் நிலையில், சொந்த வீடு கட்டுவதற்காக ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ஆறுமுகசாமியிடம் 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார் என கூறப்படுகிறது. தவனை தொகையை முறையாக திருப்பி செலுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பிரதீப் நோய்வாய்ப்பட்டுள்ளார். இதனால் வட்டியை சரியான நேரத்தில் திருப்பி கொடுக்க இயலவில்லை. இதனை தொடர்ந்து கந்துவட்டி தந்த ஆறுமுகம், திமுக நிர்வாகி இளையராஜா இருவரும் இணைந்து பிரதீப்பை கடத்தியுள்ளனர் என அவரது மனைவி மதுஸ்ரீ காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
