"தலித் சமூகத்தை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்" -ஆளுநர்

x

"தலித்துகளை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்" தமிழகத்தில் தலித் சமூகத்தினரை தேர்தல் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் சமூக நீதி பற்றி நாள்தோறும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான், தலித் சமூகத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆனால், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அரசு உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 50 சதவீத மாணவர்களால் 2-ஆம் வகுப்பு பாட புத்தகத்தைக் கூட படிக்க முடியவில்லை என்று கூறிய ஆளுநர், திறமையில்லாத மாணவர்களை உருவாக்கி விட்டு, அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது எத்தனை நாட்களுக்கு உதவும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதிக்காக தலித் சமூகத்தினர் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஆளுநர், அவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கான நேரம் வந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்