``சென்னைக்கு இந்த பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இல்லை'' - சென்னை குடிநீர் வாரியம்
சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், பிரதான குடிநீர் குழாய் இணைப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 8 மணி முதல் மே 25 காலை 8 மணி வரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள சில பகுதிகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம் என்றும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு வழக்கம் போல் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
